மென்மதுர வாக்கால் விரும்பும் சகம் – நீதி வெண்பா 4

நேரிசை வெண்பா

மென்மதுர வாக்கால் விரும்பும் சகம்;கடின
வன்மொழியி னாலிகழும் மண்ணுலகம் - நன்மொழியை
ஓதுகுயில் ஏதங்(கு) உதவியது கர்த்தபந்தான்
ஏதபரா தம்செய்த(து) இன்று. 4

- நீதி வெண்பா

இந்தியக் குயில் (Cuculus micropterus)
ஆசியக் குயில் (Eudynamys scolopacea),

பொருளுரை:

பூமியிலுள்ளவர்கள் ஒருவருடைய மென்மையான இன்சொல்லினைக் கேட்டதனால் விரும்பிப் புகழ்வர்;

அப்பூமியிலுள்ளோர் கடுமையான வன்சொல்லைக் கேட்டலினால் வெறுத்து இகழ்வர்;

இனிமையாய்க் கூவுகின்ற குயில் உலகத்தார்க்கு எதனைக் கொடுத்து உதவியது?

கடுமையாய்க் கத்துகின்ற கழுதை என்ன பிழை செய்தது? இரண்டும் இல்லை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Feb-24, 9:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 84

மேலே