நரைவரை ஊடல்

நேற்றோடு தீராத நேசங்கள் எல்லாமே
காற்றோடு காற்றாக கைகுலுக்கும் - ஊற்றாகும்
வார்த்தைகள் உள்ளம் வருடி வளர்த்துமு
கூர்த்தத்தில் போடும் முடிச்சு
*
முடிச்சிட்டு கொள்ளும் முடிவானக் காதல்
படித்திட்டப் பேரன்பு பாடம் - கொடிக்கட்டி
வாழும் குதூகலம் வான்பறக்கும் இன்பத்தில்
சூழும் மணிமகுடம் சூட்டு
*
பருகும் உயிரின் பருவப் பசியில்
பெருகும் உறவின் பிணைப்பு - உருகும்
வரையில் இனிமை மழையில் நனைந்து
நரைவரை ஊடல்கொள் நன்று
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Feb-24, 3:34 pm)
பார்வை : 94

மேலே