ஒற்றிலா குறட்பாக்கள்

*************************
நிமிரா மலையேது நீளா நதியேது
திமிரா யவைபோ லுறு
*
மாதா மனதுள மாறா துயரது
நீயா யிராதிரு வே
*
நீரோ நதிவழி தேரோ தெருவழி
யாரோ டெதுவழி யோ
*
பாயோ தலையணையோ பாரா துயிலுவதே
சேயோ டுளவெழி லே
*
ஊரா ருமறியா வேறா ருமறியா
வேரா குமாசை விதை
*
நிலவோ முகிலோ நிறமிலா நீரோ
வலமிட வானே வழி
*
இதமொடு வாழு மிதயமு மேது
முதலுனி லேயேநீ தேடு
*
ஓதி உணரா தொருவ ருரையிலே
பாதி மிகையாகு மே
*
ஓடுமொரு பேராறா லூருயர லாகுமே
நாடுவது போலோட வே
*
தீயோரை நாடாதே தீயாக மாறாதே
ஈவா ரொடிணைவா யே
*

எழுதியவர் : மெய்யன் நட்ராஜ் (16-Feb-24, 1:49 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 45

மேலே