மருத்துவமனை

ரோட்டின் ஓரம் மெல்ல நானும்
நோயாளியாய் நடை நடந்தேன்
மருத்துவமனை எங்கு என்று
மதியம் முழுதும் தேடிப் பார்த்தேன்

நான்கு தெரு தள்ளிச் சென்று
நாற்றம் மூக்கில் ஏறும் வேளை
ஐயகோ ஓர் அலறல் சத்தம்
அச்சசோ ஓர் அமைதி யுத்தம்

வேடிக்கையாய் பார்க்கும் கூட்டம்
வெளி வராண்டா எங்கும் ஓட்டம்
பார்சல் வாங்க பாதி பேர்கள்
பால் டீ வாங்க மீதி பேர்கள்

வெட்டு காயம் மூட்டு காயம்
உடல் முழுதும் இரத்த சாயம்
பிள்ளை பெறும் பெண்ணின் சத்தம்
பின் இருக்கை குழந்தை முத்தம்

அத்தனையும் நடக்கும் இடத்தில்
அமைதியாக நின்ற நானும்
ஆமை வேக கியுவில் சேர்ந்து
அசைந்து அசைந்து சென்ற போது

மருத்துவரை பார்க்க ஏனோ
மதியம் முழுதும் எடுத்ததாலோ
மயங்கி கிடந்த கண்ணும் என்னை
மறதி நோய்க்கு அழைத்திட்டதோ

செக்கப் செய்ய சொல்லி டாக்டர்
எழுதி கொடுத்த சீட்டை நானும்
நான்கின் ஓரம் மடித்து வைத்து
நாளை பார்ப்போம் டாடா என்றேன்

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (20-Feb-24, 9:54 pm)
சேர்த்தது : Kannan selvaraj
Tanglish : maruthuvamanai
பார்வை : 60

மேலே