மனமாற்றம்

பேருந்துக்காய் நின்ற நேரம்
பூக்கடைகள் சாலையோரம்
வாழைப்பழ வண்டியுமாய்
வந்து வந்து போகும் ரோட்டில்
வாடகைக் கார் ஆட்டோ சைக்கிள்
வரிசைக் கட்டி நிற்கிறதே

தேர்வு நேரம் நெருங்கும் வேளை
தேகம் யாவும் படபடப்பாய்
குருதி ஓட்டம் கூடிக் கொஞ்சம்
உடலுக்கதுவும் பாய்ச்சிடுதே
குயில்கள் யாவும் கூட்டத்தோடு
கூடி வானில் பறந்திடுதே

காத்திருக்கும் நேரம் மனதில்
மகிழ்ச்சி எண்ணம் சூழவில்லை
பள்ளிச் செல்ல நடந்த குழந்தை
பார்க்க கண்ணும் செல்லவில்லை
பஞ்சு மிட்டாய் சுவையை காற்றில்
இழுக்க மனமும் விரும்பவில்லை

தூரத்தில் உன் வருகை என்று
கொழுசின் ஒலி கூறிச்செல்ல
தொலைந்து போன மனப்படகும்
கரையை வந்துச் சேர்கிறதே
கயிர் அறுந்த பட்டம் ஒன்று
காற்றில் மெல்ல அசைகிறதே

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (21-Feb-24, 6:23 am)
சேர்த்தது : Kannan selvaraj
Tanglish : MANAMAATRAM
பார்வை : 77

மேலே