அவள் ஒரு தேவதை

"அவள் ஒரு தேவதை"

சின்ன ரெக்கையின்றி பறப்பேன்
அந்நிலவு தொட்டு குதிப்பேன்
ஒரு சிற்பமாகி கிடப்பேன்
பல நுட்பமாய் கவிபடைப்பேன்

உன் புன்னகைக்கு விழுந்தேன்
நீ காதலிக்க‌ எழுந்தேன்
நீ க‌ண்ணசைக்கச் சிரித்தேன்
உனை காதலித்தே பூரித்தேன்

உன் நினைவு ஓரழகு
உன் கனவு ஓரழகு
உன் அருகில் நானழகு
அடி நீயோ பேரழகு

எழுதும் எழுத்தில் நீயிருந்தாய்
உண்ணும் உணவில் நீயிருந்தாய்
எண்ணம் முழுதும் நீயிருந்தாய்
நீயிருப்பாதாலே நான் இருக்கிறேன்

தேவதைகள் நான் கண்டதில்லை
உனைக் காணாவிட்டால் நானில்லை
தேவதைகள் பூமியில் வாழ்வதை
உன்னாலே உணர்ந்து கொண்டேன்

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (21-Feb-24, 7:13 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : aval oru thevathai
பார்வை : 190

மேலே