நிற இரவுகள்
இனியவள் சகாப்தம் - 4
(நிற இரவுகள்)
அவளை
என் தோட்டத்திலிருக்கும்
அத்தனைப் பூக்களுக்கும் பிடித்திருந்தன.
ஆனால் அவளுக்கு
பூக்களைப் பிடித்ததாக தெரியவில்லை.
இன்றெப்போதோ
நான் பேசத் தவரிய இடைநாட்களில்
சில பூக்களை
அவளுக்குப் பிடித்திருக்கலாம்
அதையும், நான்தான்
அவளிடம்
கேட்க வேண்டுமாய் இருக்கும்.
மேக்கப் பிடிக்காது
சராசரி இரண்டாந்தர வார்த்தைகளை வேறு யாரும் சொல்லும்போது
அவள் முகத்தில்
அனுக்கங்களே இருக்காது.
என்கூட மட்டும் ஒரு ஆண் ரேஞ்சுக்கு
உட்காந்திருந்து பேசும்போது
அந்த இரண்டாம் தர வார்த்தைகளை
வெறும் நகைச்சுவையாகவே
கருதி சிரிப்பா.
இரவுகள் எனக்கு ஏன் புடிச்சதுன்னு கேட்டா
அது இவளால்தான் னு
சொல்லுவேன்.
இரவுகளை அழகாக்கி
என் உள்ளங்கைகளில்
திரும்பக் கொடுத்துட்டுப் போயிருப்பா.
நாங்கள்தான் நடந்துபோகிறோம் என்றாலும்
நிற இரவுகளுடைய சாலை
எங்க ரெண்டுபேரை மட்டுமே
சுமந்து போகிறதாக நினைத்திருப்போம்.
எதிர்க்க வருகிற யாருமே
எங்க நிழல்களுக்குள்ளதான்
மறைந்து போகிறதாக
கர்வப்படுகிறோம்.
அவளுக்கு எதெல்லாம் புடிக்காதோ
அதை முதலில் சொல்லி
நடித்துக் காட்டி, கடுப்பேத்தி
கொஞ்சம் கழித்து.
அவளுக்குப் பிடித்ததை செய்யும்போது.
அவ மனசில் இன்னும் அதிகமா நெருக்கமாகிடறேன்.
எந்த இடத்தில் நிறுத்தியும்
அவளை இப்படித்தான்னு கெஸ் பன்றது முடியாத காரியம்.
எவ்ளோ சங்கடங்களிலும்
அவ அழுது பார்த்ததில்லை.
கவிதைகள் பிடிக்காது.
ஆனால் எனக்காக வாசிக்கிறாள்.
காதலே தோணாத ஆண்கள் கிட்டஇருந்து காதலைப் பத்தி
நேரம் போறதுத் தெரியாம பேசுவா.
அவ பக்கத்தில் இருக்கும்போது
கொஞ்சமா வைன் குடிப்பேன்.
அந்தநேரம் பார்த்து
என்னைப் பாட சொல்லிக் கேட்பா.
எனக்கொரு
பட்டப்பேரு வைப்பா.
பூக்காரன் கவிதைகள் - பைராகி