உயிர்த்திசை
"உயிர்த்திசை"
கீழ்த்திசைச் சூரியன்! பழுதில்லா சந்திரன்!
குடும்பத்தை இயக்கிடும் அபூர்வச் சாவி!
தன்னொரு பிம்பமாய் இருந்திட வேண்டி
படைத்தவன் அனுப்பிய வாழும் சாமி!
எத்திசை போகினும் அன்பு கொண்டு
நேர்த்திசை போகவே வைக்கும் காந்தம்!
எத்துணை தவறுகள் செய்யும் வாரிசை
அன்பினால் திருத்திடும் இதயம் சாந்தம்!
இரும்பாய் மனம்! கரும்பாய் குணம்!
பெரும்பாடு படுத்துமே பிள்ளைகளின் ரணம்!
குறையேதும் சொல்லாமல் பசி பொறுப்பர்!
அன்பைச் சந்தேகிப்போரை முற்றும் வெறுப்பர்!
ஆரம்பம் முதல் அந்திக்காலம் வரை
மாறாத பாசமே தாயின் பாசம்!
பணங்காசு பார்க்காது பாசமே பார்த்திருக்கும்!
தள்ளாத வயதிலும் புதுப்பூவாய் பூத்திருக்கும்!
வெறுப்பாகித் தள்ளாதே முதியோர் இல்லம்
உனக்கதையா கற்றுத்தந்தது அந்த உள்ளம்?
வீட்டிற்குள் சேர்ந்து வைக்க முடியாதென்றால்
பத்தாம்மாத பிறப்பின்வலி போலியா சொல்?!?!?
அ.வேளாங்கண்ணி