விழிகள் பேசும் மொழிகள் யாதோ

விழிகள் பேசும்
மொழி யாதோ//1
விண்ணிலே பூத்த
மலரும் நீயோ //2
சொல்லிலும் தூய
தமிழ்ப் பெண்ணோ //3
அழகினில் மயக்கிடும்
அன்புத் தேரோ //4
கண்களால் கதை
பேசும் மங்கையோ //5
காட்சியிலும் கவிதைக்கு
உயிர் கொடுத்தாயோ //6
இருமனம் இணைந்திட
இன்பம் கொடுப்பாயோ// 7
கல்மனம் கொண்டு
கலங்கிடவும் வைப்பாயோ //8
காணிக்கை எதையுமே
கனிவுடன் ஏற்றிடுவாயோ //9
கண்டேனே காதலின்
கனிரசப் பேதையே//10

கவிதாசன்

எழுதியவர் : கவிதாசன் (23-Feb-24, 1:03 am)
சேர்த்தது : kavithasan
பார்வை : 138

மேலே