விண்ணைத்தாண்டி வாராயோ
விண்ணைத் தாண்டி
வாராயோ வெண்ணிலவே//1
போகுமிடம் யாவும்
கூடவே வந்தென்னைத் // 2
தேடவே வைக்கிறாய்
தேன்நிலவு மங்கையே //3
இருள்சூழும் நேரத்தில்
ஒளிர்ந்திடும் மதியைப்போலே //4
இருண்ட என்வாழ்வுக்கு
ஒளியையே தேடுகிறேன்//5
பூவான என்மனது
புழுவாகத் துடிக்காமல் //6
கண்ணுக்கு விருந்தாக
காட்சியின் அழகாக //7
பெண்ணொருத்தி என்மார்பில்
சாய்ந்து கோலமிட//8
வண்ணக் கனவுகளில்
எண்ணியே வாடுகிறேன் //9
பக்கத்தில் வந்தமர்ந்து
பதில்கூற மாட்டாயோ //10
கவிதாசன்