விதிவழி செல்லும் ஓடங்கள்

துடுப்பிழந்த ஓடம்
திசைமாறிப் போகும்//
கடல்வழிப் பயணமோ
அலைகளிலே அலையும்//
வறுமையின் நிலையோ
வாழ்க்கையில் ததும்பும்//
தலைமையில்லா குடும்பமோ
தடுமாறி வாழும் //
படித்தவன் வேலையின்றிப்
விரக்தியில் மாய்வான்//
விதியென்று கூறியே
மதியையும் இழப்பான்//
விதிவழி செல்லும்
ஓடங்கள் ஆகாமல்//
மதியாலே விதியையும்
வென்றிடுவாய் மனிதா//

கவிதாசன்

எழுதியவர் : கவிதாசன் (23-Feb-24, 1:15 am)
சேர்த்தது : kavithasan
பார்வை : 56

மேலே