விளம்பரப் பிரியர்
தலைவரே நீங்க செயிச்சீட்டீங்க.
@@@@@@@@@
என்னடா சொல்லற?
@@@@@@@@@@
நீங்க தினந்தோறும் நீங்க போற இடத்தில் எல்லாம் நிருபர் கூட்டம்
நடத்தறீங்க. சர்ச்சைக்குரிய விசயங்களைப் பேசறீங்க. பல
தலைவர்களைப். பற்றி தரக்குறைவாப் பேசறீங்க. அவுங்களைப்
பத்திப் பொய்யான தகவல்களையும் சொல்லறீங்க. உங்களுக்கு நெருக்கமா இருக்கிற யாரோ தயார் பண்ணிக்குடுக்கிற
பொய்யான ஆதாரங்களையும் நிருபர்களுக்கு காட்டறீங்க, எல்லா
ஊடகங்களும் நீங்க சொல்லறது, சொல்லாதது எல்லாவற்றையும்
வெளியிடறாங்க. அதுமட்டும் இல்லாம செய்தி
தொலைக்காட்சிகள்ல எல்லாம் விவாத நிகழ்ச்சியை நடத்தறாங்க.
நீங்க போற ஒவ்வொரு ஊரிலயும் உள்ள நீதிமன்றங்களில்
உங்கமேல மானநட்ட வழக்குப் போடறாங்க. இதையெல்லாம்
எப்படி சமாளிக்கப் போறீங்க?
@@@@@@@
அடே அதை எல்லாம் நம்ம கட்சியோட வழக்கறிஞர் அணி
பார்த்துக்கும்டா. வழக்குகளை இழுத்தடிப்பேன். கடைசில
நீதிமன்றம் போய் மன்னிப்புக் கேட்டா போதும்டா.வழக்கு எல்லாம்
சுக்கு நூறாப் போயிடும்டா.
@@@@@@@@@@
சரி. நீங்க ஏன் மற்ற தலைவர்களைப் போல இல்லாமல் எப்பவும்
சர்ச்சை, அவதூறுக்குரிய வகையில் பேசறீங்க?
@@@@@@@@
நீ என்னடா சொன்ன கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி
@@@@@@@@@
எல்லாத் தொலைக்காட்சி செய்திகளிலும் உங்களைப்
பேச்சுக்களைப் பற்றியே கருத்து வெளியிடறாங்க. விவாத நிகழ்ச்சி
நடத்தறங்க. இது தான் நான் சொன்னது,
@@@@@@@@@@@@
இதனால எனக்கென்ன இலாபம்னு கேக்கறீயா? செலவு இல்லாம
விளமபரம்டா. கோடிக்கணக்கான மக்கள் தினம் தினம் என்
பேரையும் நம்ம கட்சிப் பேரையும்,நம்ம கட்சிச் சின்னத்தையும்
பார்ப்பாங்க. காதால கேட்ப்பாங்க. தேர்தல் வந்தா அவுங்க மனசில
நம்ம கட்சிச் சின்னம் தான் நிக்கும். இது அமோக வெற்றியை நம்ம
கட்சிக்கு அள்ளித்தரும் யூகம்டா.
@@@@@@@@@@@
தலைவரே நீங்க தனிப்பிறவி. எப்பிடி உங்களைப்
பாராட்டறதின்னே தெரியலீங்க தலைவரே.