பாவகை மூன்று கருத்தோ ஒன்று

பாவகை மூன்று கருத்தோ ஒன்று
**********

1. கலிவிருத்தம் ( விளம் /மா /காய் / விளம்)

வேலனைப் போற்றும் வேல்மாறல் துதித்திட ;
காலனும் நம்மைக் காணாது ஒதுங்குவன் !
ஆலடி ஆர்ந்த ஆசானை நினைத்திட ;
ஓலமிட் டோடும் ஓயாத வினைகளே !
**********
2. நேரிசை ஆசிரியப்பா
********
வேலனை நினைத்து வேல்மா றல்தனை ;
அனுதினம் கருத்தொடு துதித்து நிற்க ;
காலனும் ஒதுங்கி ஓடியே மறைவன் !
ஆலமர் கடவுளை நினைக்கவே ,
தடமின்றி அழியும் வாட்டிடும் வினைகளே !
*********
3. குறள் வெண்பா
******
வேதனைக்கு மாறலோதி, நற்கதி சேர்தர்க்கு ;
வேதனைச் சார்ந்து உருகு !
******
விளக்கம் :-
வேல்மாறல் = முருகனைப் போற்றும் தோத்திரம்
ஆலடி ஆர்ந்த = ஆலமரத்தடியில் அமர்ந்த சிவபிரான்
வேதனைச் சார்ந்து = வேதநாயகன் சிவனைச் சார்ந்து

எழுதியவர் : சக்கரைவாசன் (24-Feb-24, 6:06 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 47

மேலே