குலோத்துங்க சோழன் கோவை - நூல் - ஐந்தாவது – பிரிவுழி மகிழ்ச்சி

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.

மூன்றாவது - வன்புறை.

அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்;

அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்;

அவை: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதல் இடமணித்தென்றல் ஈறாகிய ஆறுவிரிகளையுடையன;

அவை வருமாறு:

அணிந்துழி நாணீயது உணர்ந்து தெளிவித்தல்.

பெருநயப் புரைத்தல்.

தெய்வத்திறம் பேசல்.

பிரியே னென்றல்

பிரிந்து வருகென்றல்.

இடமணித் தென்றல்.

இவற்றுள் முன்னைய மூன்றும் ஐயந் தீத்தற்கும், பின்னைய மூன்றும் பிரிவறிவுறுத்தற்கும் உரியன.

3 - வன்புறை முற்றிற்று.

நான்காவது – தெளிவு.

ஐந்தாவது – பிரிவுழி மகிழ்ச்சி.

அஃதாவது – பிரிந்து போகுமிடத்துப் போகின்ற தலைவி தன்மையைக் கண்டு தலைவன் மகிழ்தல்;

இது – வகையினறிச் செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லலும், பாகனொடு சொல்லலும் ஆகிய இரண்டு விரிகளை யுடையது; அவை வருமாறு:-

செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்.

பாகனொடு சொல்லல்.

(இ-ள்) தலைவன் றன்னைத் தேடிவந்த தேர்ச்சாரதியிடத்தில் தலைவி செல்லுதலைக் காட்டிக் கூறுதல்.

முன்பார்த்த வச்சமுஞ் சோர்வோ டுயிர்ப்பு முகவெயர்ப்பும்
பின்பார்த்த நோக்குமென் பேரன்பு மாய்ப்பெரு வேந்தரெல்லாந்
தன்பாற் பணியுஞ் சரணான் குலோத்துங்கன் றஞ்சைவெற்பின்
மின்பார்த்த வேல்வல வாபார்க்கி லாயொரு மின்செ(ல்)வதே! 31

5-பிரிவுழி மகிழ்ச்சி முற்றிற்று.

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (27-Feb-24, 7:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே