முருகன் என்றால் எல்லாம் அழகே

முருகென்னும் சொல்லிற்கு அழகென்ற பொருளாய்

முருகாயி ன்றுனைநான் கண்டியில் கதிர்காம

முருகனாய் தரிசித்த போதுகண்டேன் மால்மருகா

அழகன் நீயென்றால் அன்னைவள்ளி வடிவழகி

அழகு நிந்தன் வேலழகு மயிலழகு

அழகு நிந்தன் சேவற்கொடி அழகு

முருகா முருகா உன்னிலெல்லாம் அழகே


( சென்றவாரம் கண்டி சென்றபோது கதிர்காம முருகனை
தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன் )

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Feb-24, 4:23 pm)
பார்வை : 28

மேலே