ஒரு மௌனம்

மௌனம்
இங்கே
மௌனித்துப் போனது.....இல்லை
மரணித்துப்போனது ......!!
மரணித்தாலும்
மறந்துபோகா
நினைவுகளை மனசு
சுமந்து சுமந்து
வலிதாங்கி
வேதனை
பொறுத்து......தன்னிலை
மறந்து
உன்
நினைவு மட்டுமே
உயிர்
உள்ளவரை
என்று
உண்மையாய்
வாழ்ந்த ஓர்
உயிர்
மௌனித்துப் போனது
உனக்காக
மட்டுமே......!!!!

நன்றி
இப்படிக்கு
உன்
உயிர் மூச்சு .....!!!

எழுதியவர் : தம்பு (29-Feb-24, 4:50 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : oru mounam
பார்வை : 89

மேலே