என்னவள்

என்னைப்பற்றி ஓர் கவிதை எழுத நினைத்தேன்
எழுதியும் முடித்தேன்....முடித்த கையேடு
படித்தும் பார்த்தேன் ......என்ன ஆச்சரியம்
என்னைப்பற்றி எழுத நினைத்த நான்
என்னவளை பற்றியே அல்லவா எழுதியுள்ளேன்
யோசித்தேன்..... புரிந்தது
எல்லாம் என்னுள் இயங்கும் அவள் .......
அவள் ஆதிக்கம்தான் வேறென்ன ..
என்னுள் எப்போதும் அவள்தான் அவள் மட்டுமே ..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Feb-24, 7:21 pm)
Tanglish : ennaval
பார்வை : 131

மேலே