காதல்

மாமிக்கு நேரே மருமகள் மோதுகையில்
சாமியா ராகிச் சகி
*
தாய்க்கெதிர் நின்றுனது தாரத்தை தூற்றுமன
நோய்க்காளா துன்னைநீ நோக்கு
*
தாய்தா னெனினுமுன் தாரக் குறைகூற
வாய்திற வாதிறவே வை
*
வீட்டுச் சமரெடுத்து வீதியிட்டு நாலுபேர்
கேட்டுமிழச் செய்யாதே கேள்
*
கூட்டுக் குடும்பத்துள் குத்துவெட் டில்லாதே
காட்டும் கலைவளர்த்துக் காட்டு
*
பிள்ளைகள் முன்னே பெரும்பாலும் சண்டையிடும்
முள்ளை விதைக்காமல் மூடு
*
சிறிதுணவே யாயினும் சேர்த்தன்பைக் கூட்டிப்
பறிமாற்றி யுண்பதற்குப் பார்
*
மரியாதை, அன்பு மழலைக்குத் தாய்ப்பால்
பரிவொடு ஊட்டிப் பழக்கு
*
உன்தடம் கண்டெழும் உன்குழந்தை முன்செல்ல
மென்தடம் காட்டி மினுக்கு
*
சிற்றுயிக்கும் பேரன்புச் செல்வத்தைக் காட்டிவாழ்வின்
வெற்றிக்கு வித்திட்டு வை

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Mar-24, 1:59 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 97

மேலே