முதல் கையெழுத்து

ஆட்சிக்கு வந்தால்
முதல் கையெழுத்து என்று சொல்லி சொல்லி முன்னூறு திட்டங்களை சொல்லி காற்றில் கையெழுத்திட்ட கயவர்கள் வாழும் உலகில் ஓர் உயிர் அற்ற உடல் அன்னையின் சேர்ந்திட ஒரு கையெழுத்து வேண்டி கிடக்கிறது......!!

செய்யாத குற்றத்தை மூன்று தலைமுறைகள் வாழும் காலத்தை சிறைக்குள் சிக்கி வெளிவந்த ஒரு நிரபராதியின் நினைப்பை நிர்மூலமாக்கிய இந்த காற்றில் கையெழுத்து இடும் கயவர்கள் செய்து முடித்துள்ளார்.....!!

ஒரே ஒரு முறை தாயின் ஒரு பிடி சோற்றுக்காய் தாய் நாடு போகவிரும்பிய மகனை இப்படி பிணமாக்கி அனுப்பிய பிசாசுகள் உலவும் உலகம் இது.....!!

ஈழப்போரின் இறுதியில் நாடக உண்ணா விரதம் காட்டிய கயவன் கூடவே
கைகோர்த்த (வை-)கரும் சால்வை போர்த்த கறுப்பாடுகள் வந்து அழுவது அதைவிட அசிங்கமாய் நாறுது......!!

ஒலிவாங்கி பிடித்து ஊரை ஏமாற்றி தேர்தல் ஆசனங்கள் ஆக்கிரமிக்கும் இந்த அக்கிரமக்காரர்களுக்கு அந்த அன்னையின் அன்பும் இந்த அண்ணனின் பாசமும் தெரிய புரிய வாய்ப்பே இல்லை.....!!

வாய்ப்புக்காக வாசல் தேடும் இந்த வாயாடிகள் வெறும் வியாபாரிகளே...... இலாபம் மட்டுமே இவர்கள் இலக்கு..... தரம் குணம் அல்ல ......!!

கூத்தாடிகளை கொச்சைப்படுத்தும் இவர்களும் ஒருவித கூத்தாடிகளே....!!!!!

அந்த பச்சோந்தியும் திருந்திவிடும் இவர்களின் காலை ஒரு அரசியல் மாலை இன்னொரு அரசியல் என்று நிறம் மாறுவது கண்டு.....!!

சாந்தனின் ஆன்மா சாந்தியடைய பிராத்திப்பதை தவிர நான் என் செய்வேன்???????முன்னூறு நாட்கள் சுமந்து பெற்ற பிள்ளையை கண்முன்னே தாய்க்கு பிணமாய் பரிசளித்த அசாத்திய சாத்தானுகளுக்கு நன்றி....!

உங்கள் கையெழுத்துக்களோடு இனொரு கையெழுத்து போட்டு விடுங்கள் வித்துடல் அவன் தாய் நாடு போய்விட......!!

நன்றி - இப்படிக்கு ஒரு ஈழ்க்குரல்

கையெழுத்து -(--------------)
இன்னும் கிடைக்கவில்லை.

எழுதியவர் : தம்பு (1-Mar-24, 4:27 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : muthal kaiyezhuthu
பார்வை : 37

மேலே