தாய்மரம்

தாய்மரம்
பூவையின்
விழிகளில்
வழியும்
விழிநீர்
மூச்சுக்காற்றின்
தணலில்
தகிக்கிறது.
வேரோடு
சாய்க்கப்பட்ட
மரங்கள்
விதைக்கப்படும்
நாட்டில்
இல்லவாசல்களுக்குத்
தான்
விசாலம்.
இளமகளிரின்
இதயவாசல்களுக்கு
என்றும்
இறுக்கம்.
அலுவலகக்
கோப்புகள்
மட்டுமா
கட்டிவைக்கப்பட்டுள்ளன?
வளையல்களும்
தான்.
சூறாவளிகளுக்கு
தாக்குப்பிடிக்காத
மரங்கள்
சாயலாம்.
சாய்ந்த
மனிதர்களை
சுமப்பது
சுமைதாங்கிகள்
மட்டும்.
மரம்
தாயாவதும்
தாய்
மரமாவதும்
வரம்.
-எழில்
08 03 2024