பெண்ணின் பெருமை

நாட்டின் பண்பாட்டு
பெருமைகள் எல்லாம்
எங்க வீட்டுப் பெண்களின்
கையில்தான் உள்ளது

அன்பு இருக்கும் இடத்தில்
பெண்கள் எல்லோரும்
அடிமைகள்தான்

பெண்கள் இல்லாத இடத்தில்
அன்பும் பண்பும் இருப்பதில்லை

நாட்டில் பெண்களுக்கு
சுதந்திரம் வேண்டும்
பெண்களும் கிடைத்த
சுதந்திரத்தைப் பேணி வளர்த்து
பண்பாடுகளின் பெருமைக்குப்
பங்கம் வராமல் காத்திட வேண்டும்

பெண்களே நாட்டின் கண்கள்
என்பதில் பெருமைக் கொள்வோம்
பெண்கள் அனைவருக்கும்
மகளிர் தின நல் வாழ்த்துகள்🌹🌹
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Mar-24, 6:13 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : pennin perumai
பார்வை : 734

மேலே