மாக்கோலம்

கண்களால் பேசிக்கொண்டிருந்த நீ
காதலுக்கு அடையாள புள்ளி வைத்தாய்
காலத்தின் கோடுகள்-அதை
கோலங்கள் ஆக்கியது
ஆனால் இப்போது...,
பணப்பறவைகளால்
பரவலாக கொத்தியும்
சாதி எறும்புகளால்
சன்னமாக அரித்தும்
பாதி கோலங்கள் அழிந்துவிட்டது
எஞ்சியவையும்
கண்ணீர் மழையால்
கரைந்து கொண்டிருக்கிறது
-- வெ.பசுபதி ரங்கன்

எழுதியவர் : -- வெ.பசுபதி ரங்கன் (19-Mar-24, 8:11 pm)
சேர்த்தது : vpasupathi rengan
Tanglish : maakkolam
பார்வை : 26

மேலே