vpasupathi rengan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : vpasupathi rengan |
இடம் | : Srimushnam |
பிறந்த தேதி | : 12-May-1968 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Dec-2010 |
பார்த்தவர்கள் | : 281 |
புள்ளி | : 48 |
I have qualified M.Com.,B.Ed., and released my first Puthu Kavithai Thoguppu Name"Nandhavana Thenral" at the Year of 1993.
திருவிழா
தேர்தல் வந்துவிட்டது
இனியெங்களுக்கு
ஆறுதல் சொல்லவும்
ஆட்கள் வந்துவிடுவார்கள்
வாருங்கள் அரசியல்வாதிகளே!
வாருங்கள்!
புழுக்கத்திலிருக்கும்
pகருப்புப் பணத்தை
புழக்கத்திற்கு கொண்டுவாருங்கள்
கங்கை-காவிரி
இணைப்புத்திட்டந்தானே தோல்வி
கவலையைவிடுங்கள்!
கட்சிகளின் கூட்டணி முயற்சித்தான்
வெற்றி பெற்றுவிட்டதே!
அரசியல்வாதிகளே!
வாக்குறுதிகளை
வாரிக்கொட்டுங்கள்
காதுகளின் சவ்வுகள்
கிழியும்வரைக் கேட்டுக்கொண்டேயிருக்கின்றோம்
இதுதான் எங்களுக்குக்கிடைத்த
இனிய சுதந்திரம்!
அரியாசனம் ஏறியதும்
நீங்கள் செய்யும்
அடாவடித்தனங்களைப்பார்க்கும்போது
ஒவ்வோர் சமயங்களில்
நாங்கள்
வெறிகொ
நாங்கள் பட்டதாரிகள்
சோகத்தின் பட்டாதாரர்கள்
நாங்கள்
சரஸ்வதி
சகாயத்தால்
பட்டங்கள் பெற்றோம்
லட்சுமி எங்களை
லட்சியம் செய்யாததால்
மணிமேகலையைத்
தேடியலைகின்றோம்!
நாங்கள் பட்டதாரிகள்
சோகத்தின் பட்டாதாரர்கள்
நாங்கள்
தேடிக்கொண்டிருக்கிறோம்
தொலைத்துவிட்டு அல்ல
வாழ்க்கை தொலையாதிருக்க
வேலை தேடிக்கொண்டிருக்கிறோம்
நாங்கள் பட்டதாரிகள்
சோகத்தின் பட்டாதாரர்கள்
நாங்கள்
பாக்கெட் மணிக்கு
பல் இளித்தும்
அசடுவழிந்தும்
அவமானப்படும்
அவதாரப்புருஷர்கள்
விண்ணப்பச்செலவுக்கே
அப்பாவிடம்
விண்ணப்பம் செய்து
வேண்டிநிற்கும்
வேடதாரிகள்
நாங்கள் பட்டதாரிகள்
சோகத்தின்
நாங்கள் பட்டதாரிகள்
சோகத்தின் பட்டாதாரர்கள்
நாங்கள்
சரஸ்வதி
சகாயத்தால்
பட்டங்கள் பெற்றோம்
லட்சுமி எங்களை
லட்சியம் செய்யாததால்
மணிமேகலையைத்
தேடியலைகின்றோம்!
நாங்கள் பட்டதாரிகள்
சோகத்தின் பட்டாதாரர்கள்
நாங்கள்
தேடிக்கொண்டிருக்கிறோம்
தொலைத்துவிட்டு அல்ல
வாழ்க்கை தொலையாதிருக்க
வேலை தேடிக்கொண்டிருக்கிறோம்
நாங்கள் பட்டதாரிகள்
சோகத்தின் பட்டாதாரர்கள்
நாங்கள்
பாக்கெட் மணிக்கு
பல் இளித்தும்
அசடுவழிந்தும்
அவமானப்படும்
அவதாரப்புருஷர்கள்
விண்ணப்பச்செலவுக்கே
அப்பாவிடம்
விண்ணப்பம் செய்து
வேண்டிநிற்கும்
வேடதாரிகள்
நாங்கள் பட்டதாரிகள்
சோகத்தின்
உன் தங்கையின்
பார்வைக்காற்று
என் நெஞ்சத்தில் வீசுவதால்
உன்
கற்பூர நினைவுகள்
கரைந்து கொண்டிருக்கிறது!
வெ.பசுபதி ரங்கன்
மேகத்தால் மறைத்தாலும் வெண்ணிலாவே - உன்
தேகமது தெரிகிறதே வெண்ணிலாவே
மாதத்தில் ஓர்நாள்தான் வெண்ணிலாவே - நீ
மாயமாய் மறைவதென்ன வெண்ணிலாவே
வெட்கத்தால் மறைந்தாயோ வெண்ணிலாவே - மீண்டும்
பக்கத்தில் வந்ததென்ன வெண்ணிலாவே
இருப்பவர்க்கும் இல்லார்க்கும் வெண்ணிலாவே - நீ
இன்னொளியைத் தருகின்றாய் வெண்ணிலாவே
நல்லவர்க்கும் தீயவர்க்கும் வெண்ணிலாவே - நீ
நன்முத்தாய் விளங்குகின்றாய் வெண்ணிலாவே
நீல நதியினிலே வெண்ணிலாவே - நீ
நீந்தும் அழகென்ன வெண்ணிலாவே
மலரிதழின் பனித்துளியில் வெண்ணிலாவே - நீ
மாணிக்கம
எட்டாவது படிக்கும்
என் தங்கையிடம் கேட்டேன்
இந்தியா
எந்த கண்டத்தில் உள்ளது என்று
பட்டென்றுதான் பதில் சொன்னாள்
எமகண்டத்தில்
என்று!
-- வெ.பசுபதி ரங்கன்
அன்றுவந்த வெண்ணிலா தந்துபோன கனவு
வென்றுவிட்ட என்மனதில் வெந்துவிடும் நினைவு
ஒன்றுபட்டு ஒத்தறியா விந்தையான உறவு
என்றுவரும் என்கிறேங்கி இறங்கவில்லை உணவு
பால்நிலா தினமும்வந்து பருவராகம் பாடும்
வேல்விழி யில்விண்மீன் கள்ஓடிவிளை யாடும்
நூலிடை யில்நூறுமுறை நூலவிழ்த்து நாளும்
காலயர்ந்து கையயர்ந்து கன்னிமடி வீழும்
கோவைப்பழக் கோதையிதழ் போதைக்கொள்ளச் செய்யும்
பாவைமடி மீதுதினம் பருவமழை பெய்யும்
தேவையவள
அங்கம் முழுதும் பொய்எங்கள் ஊர் நாடகத்தில்அவனே அரிச்சந்திரன்
என் பாட்டியின் மனது
பச்சைக்குழந்தை மாதிரி
என் தாத்தாவின் மனது
அவர் தலை முடி மாதிரி(வெள்ளை)
என் அம்மாவின் மனது
இலவம் பஞ்சு மாதிரி
என் அப்பாவின் மனது
அவர் தலை வழுக்கை மாதிரி(சுத்தம்)
என் மனது மட்டும்
துவைத்து கிழிந்த துணி மாதிரி
காரணம்...,
என்னவள் மனது
கல்மாதிரி!