அவள் ஒரு மாதிரி
என் பாட்டியின் மனது
பச்சைக்குழந்தை மாதிரி
என் தாத்தாவின் மனது
அவர் தலை முடி மாதிரி(வெள்ளை)
என் அம்மாவின் மனது
இலவம் பஞ்சு மாதிரி
என் அப்பாவின் மனது
அவர் தலை வழுக்கை மாதிரி(சுத்தம்)
என் மனது மட்டும்
துவைத்து கிழிந்த துணி மாதிரி
காரணம்...,
என்னவள் மனது
கல்மாதிரி!