உனக்கு என்னடி ஆச்சு செல்வி

உனக்கு என்னடி ஆச்சு செல்வி?

ஏன் ஒரு மாதிரியா இருக்கிற? தினமும்

கலகலப்பாப் பேசுவே. இன்னிக்கு

தலையை கவிழ்ந்து உட்கார்ந்து எதோ

யோசனையில் ஆழ்ந்து இருக்கிற?
@@@@@@

உமா, என்னோட படிக்கிற பலரும் "என்னடி

இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழற

உனக்கு உன் பெற்றோர்கள் கொஞ்சங்கூட

தொலைநோக்கு சிந்தனை இல்லாம

உனக்கு 'செல்வி'ங்கிற தமிழ்ப் பேரை

வச்சிருக்கிற ஆண்களே"ன்னு சொல்லி

என்னை அவுங்க எல்லாம் கேவலமாகப்

பார்க்கிறாங்கடி உமா.
@@@@@@

அவுங்க சொல்லறது சரிதானே! அறுபது

ஆண்டுகளுக்கு முன்னாடி பெண்

பிள்ளைகளுக்கு வைக்கிற பேரு 'செல்வி'.

நாம் வாழற காலம் செயற்கை நுண்ணறிவு

காலம். தமிழ்ப் பேரை வைக்கிறது

சரியில்லடி. எல்லோரும் அவங்க

பிள்ளைகளுக்கு இந்தி அல்லது

சமஸ்கிருதப் பேருங்களை

வைக்கிறதைத்தான் பெருமையா

நினைக்கிறாங்க. இல்லன்னா இந்தி/

சமஸ்கிருதம் மாதிரி வலியுள்ள சேருங்கள்

உருவாக்கி அவங்க பிள்ளைகளுக்கு பேரு

வைக்கிறாங்க.

@@@@@#

என் பேரை நெனச்சா எனக்கே அசிங்கமா

இருக்குடி உமா. என் தமிழ்ப் பேரைக்

தூக்கிட்டு மற்றவங்க மாதிரி பிறமொழிச்

பேரை வச்சு என்னோட மதிப்பை உயர்த்த

ஒரு வழி சொல்லுடி உமா.

@@@@@@@
அடியே செல்வி உனக்கு உன் பேரு

பிடிக்கல. உன் பேரின் முதல் எழுத்தில் ஒரு

சிறு மாற்றம் செய்தாப் போதும். உன் புதுப்

பேரைக் கேட்டு நீயே ஆனந்தக் கண்ணீர்

வடிப்படி செல்வி.

@@@@@@@

என்ன மாற்றம்? அதைச் சீக்கிரம் சொல்லுடி

உமா.

@@@@@@

'செல்வி'யை 'ஷெல்வி'யாக்கினாப் போதும்

உன் தோழிகள் உறவுகள் எல்லோருமோ

"'ஷெல்வி', அடடா என்ன அருமையான

பேரு. உலகத் தமிழர் யாரும் அவுங்க

பெண் குழந்தைக்கு வைக்காத

அருமையான பெருமைக்குரிய பேரு.

ஸ்வீட்டஸ்ட் நேம்"னு பாராட்டுவாங்கடி

ஷெல்வி‌.
@@@@@@

இந்த அருமையான மாற்றத்தைச் சொல்லி

என் பேரை அழகான பேரா மாற்றிக்

கொடுத்த உனக்கு என் வாழ்நாள்

முழுவதும் நன்றி சொல்வேன்டி உமா.

இன்னிக்கே என் வழக்கறிஞர் மாமாவைப்

பார்த்து என் பெயர் மாற்றம் பற்றிச்

சொல்வேன். அவர் என் அழகுப் பெயர்

'ஷெல்வி' நாளிதழ்களிலும் அரசிதழிலும்

முறைப்படி வெளியிட வேண்டியதைச்

செய்வாருடி உமா. என்னை ஒருமுறை

'ஷெல்வி'னு கூப்புடுடி உமா.

@@@@@@@@

ஷெல்வி, ஷெல்லி, ஷெல்வி, ஷெல்வி,

ஷெல்லி. போதுமா? நான் வீட்டுக்குப்

போறன்டி ஷெல்வி.

எழுதியவர் : மலர் (21-Mar-24, 1:40 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 53

மேலே