காய்ந்த வயிறு

காய்ந்த வயிறு
கஞ்சியைத்தான்
தேடும்
கடவுளை
அல்ல..... என்று
ஓரு பேராசிரியர்
பேசிய வார்த்தை
என்னை சிலிர்க்க வாய்த்த
ஒரு பேச்சாய் என்
மூச்சை
நிறுத்தி நகர்த்தியது.

உண்மையின்
தரிசனத்தை
ஒரு உவமை கலந்து
கூறியது கூரிய
வாளின் கூர்மை போல
என்னை
வெட்டிச் சாய்த்தது.....!!

இங்கே என்ன
உண்மை
என்பதை விட...... கஞ்சிக்கு
கையேந்தும்
கையறுநிலையில் மக்களை
விட்டு..... வெறும்
பொய் வாக்குறுதிகளை உயிரோடு
இருக்கும்போதே
வாய்க்கரிசி
போடும்
வார்த்தையால மேடைப்பேச்சின்
நிஜங்களை உணராத
மக்கள் அவர்களின்
வாழ்வின் பிறப்பின்
பயனை
பூர்த்தி செய்யாமலே
போய்ச்சேர்ந்து விடுகிறார்கள்.....!!

இங்கே
தேவை
கஞ்சி அல்ல..... வஞ்சிக்கும்
கயவர்களை
களையெடுக்கும்
நிஜ
உள்ளங்களே......!!
கடவுள் கூட
கருணையில்
கயவர்களை
விட்டுவிடும்....... இங்கே
விடுதலை
என்பதே
தண்டனை
என்று
உணரும் வண்ணம்
மிகப்பெரிய தண்டனையை
இவர்களுக்கு
கொடுக்கும் மிகப்பெரிய
தண்டனையை
கண்டுபிடிப்பது
மட்டுமே.

மாற்றான்
என்
வீட்டை
ஆண்டால்.......
இப்படித்தான்
என்
வாழ்வு
கேடுகெட்டு
தெருவில்
போகும்.......!!!

இது
புரியாத
எவனும்
இன்றய
தாய்
நிலத்தில்
வாழ்வது
உண்மையான
வாழ்வல்ல......!!!!

ஏதிலியாய்
இங்கிலாந்தில்
வாழும் ஒரு
ஈழ
தமிழனாய்
என் நிலம்.....
என் ஊர் .....
என் மக்கள் .....
என்று
வாழாமல்
எங்கேயோ ஒரு
நிலத்தில்.....
ஊரில்.....
யாரோ மக்களுடன்.....
வாழ்வது......
வாழ்க்கை என்று
சொல்வது
மிகப்பெரிய
பொய்.......பொய்களோடு
வாழாதே...... உன்
நிலத்தில்
புரிதலோடு
உன்
உரிமைகளோடு
வாழு......!!

இதுவே
மிக
பெரிய
வாழ்க்கை.......!!!!

வாழ்க வளமுடன்.....!!!

நண்பன்

எழுதியவர் : தம்பு (20-Mar-24, 11:47 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : kayntha vayiru
பார்வை : 130

மேலே