ஏனோ

கண்ணே உன் கண்ணுக்குள் விரும்பியே சிக்கித்தவிக்கின்றேன் அது

மீளா காதல் சிறையென்று தெரிந்தும் ஏனோ !

பிறை நெற்றிதனில் குடியேறியிருக்கும் சின்னசிறு திலகமென மாறிவிட ஆசை வந்ததும் ஏனோ !

உன் ரோஜாமடலென திகழும் காதுகளில் ஊஞ்சலாடிடும் குட்டி குடை ஜிமிக்கியென மாறிவிட ஆவல்

வந்ததும் ஏனோ !

செங்கதிரவன் ஒளியால் பொன்னென மின்னிடும் உன் பட்டு கன்னத்தில் அந்த கதிரொளியாய் மாறி

உன்னை தொட்டுவிட பேராசை வந்ததும் ஏனோ !

கூர்தீட்டிய கூர்வாளாய் என்னை கொள்ளும் உன் நாசி மேலே மின்னும் மூக்குத்தியாய் மாறிவிட

பேராவல் வந்ததும் ஏனோ !

உன் செவ்விதழ்களுக்கிடையே சிக்கி தவிக்கும் உன் வெண்டைப்பிஞ்சு விரல் நகமென மாறிவிட

ஆசை கொண்டதும் ஏனோ !

காட்டாற்று வெள்ளமென கரையுடைக்க காத்திருக்கும் என் காதலை உன் கண்களெனும் சிறைதனில்

அடைத்துவிட்டு உன் காதலுக்குக்காக ஏங்குகின்றேனடி சகியே !

எப்படி கூறுவது என் மனதினை ஆட்டுவிக்கும் இக்காதலை நான் எப்படி கூறுவது உன்னிடத்தில் கூறடி

என் கண்மணியே !

எழுதியவர் : priyavathani (29-Mar-24, 8:05 pm)
சேர்த்தது : priyavathani
Tanglish : eno
பார்வை : 49

மேலே