மயிலேநீ வந்தால் மனம்துள்ளி ஆடும்
மயிலாடும் அத்துறை மீதுமயில் ஆடும்
மயிலேநீ வந்தால் மனம்துள்ளி ஆடும்
கயல்போல் அசைந்திடும் கண்கள் இரண்டால்
புயலொன்று வீசுதென்னில் பார்
---சில யாப்புத் தகவல்கள் :---
---- 1 3 ல் மோனை ( பழைய செய்யுள் வழக்கம் )
---கட்டளைக் கலித்துறை ஐஞ்சீர் நெடிலடி பாவினக் கவிதை
இதில் 1 5 ஆம் சீரில் மோனை அமையும் எடுத்துக்காட்டுக்கு
அபிராமி அந்தாதியைப் புரட்டவும்
---மேலே உள்ள ஒரு விகற்ப இன்னிசை வெண்பாவில்
ஈற்றடியை இப்படியும் அமைக்கலாம்
--புயலொன்று வீசுதுநெஞ் சில்
-- பு சி 1 3 ல் மோனை
நெஞ்சில் ---நெஞ்சு இல் = நெஞ்சில் --- நெஞ் சில் சீர் கருதி சொல் பிளவு படல்
வகையுளி