priyavathani - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  priyavathani
இடம்
பிறந்த தேதி :  18-Jan-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Dec-2013
பார்த்தவர்கள்:  382
புள்ளி:  35

என் படைப்புகள்
priyavathani செய்திகள்
priyavathani - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2024 8:05 pm

கண்ணே உன் கண்ணுக்குள் விரும்பியே சிக்கித்தவிக்கின்றேன் அது

மீளா காதல் சிறையென்று தெரிந்தும் ஏனோ !

பிறை நெற்றிதனில் குடியேறியிருக்கும் சின்னசிறு திலகமென மாறிவிட ஆசை வந்ததும் ஏனோ !

உன் ரோஜாமடலென திகழும் காதுகளில் ஊஞ்சலாடிடும் குட்டி குடை ஜிமிக்கியென மாறிவிட ஆவல்

வந்ததும் ஏனோ !

செங்கதிரவன் ஒளியால் பொன்னென மின்னிடும் உன் பட்டு கன்னத்தில் அந்த கதிரொளியாய் மாறி

உன்னை தொட்டுவிட பேராசை வந்ததும் ஏனோ !

கூர்தீட்டிய கூர்வாளாய் என்னை கொள்ளும் உன் நாசி மேலே மின்னும் மூக்குத்தியாய் மாறிவிட

பேராவல் வந்ததும் ஏனோ !

உன் செவ்விதழ்களுக்கிடையே சிக்கி தவிக்கும் உன் வெண்டைப்பிஞ்சு விரல் நகம

மேலும்

priyavathani - priyavathani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2017 5:54 pm

உன்னாலே!
என்னவள் நீதானே!உனை பார்த்த பின்தான்
நானும் நீயாய் மாறிப்போனேனே!

உன் ஓரவிழிப் பார்வை தீண்டும் பொழுதெல்லாம்
சூரியனைக் கண்ட பனித்துளிபோல கரைந்தே போனேனே!

உன் கற்றை கருங்கூந்தல் கலைத்து விளையாடத்தான்
காற்றாய் நானும் மாறிப்போனேனே!

உன் பூப்பாதம் நடந்திடத்தான் பாதையாய் மாறி
தினம் தினம் காத்து கிடக்கின்றேனே!

உன் நுனிவிரல் தீண்டும் ஓர் நொடிக்காதான்
மலராய் நானும் மலர்கின்றேனே!

மேலும்

உனக்கென வாழும் ஜீவன் காதலன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2017 10:07 pm
உன்னால்தானே எல்லாம் . உனக்காகத்தான் எல்லாம் ! 21-Aug-2017 9:55 pm
priyavathani - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2018 8:05 pm

என்னவளே! காற்றாக மாறியேனும் ஒரு முறை தீண்டிவிடேன்!
உயிர் கொண்டுவிடுவேன் அந்த நொடியே!

மேலும்

priyavathani - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2018 2:22 pm

இயற்கை ஓவியன் எனக்காக படைத்த
பேசும் சித்திரமடி நீ எனக்கு !

என்னை பிரதிபலிக்கும் கண்ணாடியும் நீயே !

கரை காண இயலாத நட்பின் ஆழமும் நீயே !

நீ நான் என்பதெல்லாம் நாமாய் மாறியதெல்லாம் நம் நட்பாலே !

புது புனலாய் ஊற்றென நட்பெனும்
நீரை என்னுள் உருவாக்கிவிட்டவளும் நீயே !

தாயாய் தந்தையாய் உறவுகள் யாவுமாகி எனக்கென நின்றவளும் நீயே !

தோழி எனும் இரண்டெழுத்தாகிய ஒரு வார்த்தைக்குள்
எனக்கானவளாக சகலமுமாய் இருந்து கொண்டிருப்பவளே !
என் உயிர் தோழியே ! யாதுமாகி நின்றவளே !

மேலும்

priyavathani - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2018 5:16 pm

வெள்ளி சிதறலென விண்மீன்கள்
வான் எங்கும் சிதறி இருக்க!

வெண்ணிலவொளியோ பூமிமகளை
சுகமாய் வருடி இருக்க!

பனிசாரலை ஊடுருவும் கதிரவன் ஒளியென காதல்
என் மனமெங்கும் பரவி இருக்க!

வெண்தாமரை மலரென நீயோ
என் அருகில் வீற்றிருக்க!

உன் பூவிதலிருந்து உதிரும் வார்த்தைக்காக
என் இதயம் காத்திருக்க!

நானோ என்னை
உன் கண்ணில் தொலைத்திருக்க!

எப்பொழுதடி கூறுவாய் உன் கண்பேசும் காதலை வார்த்தைகளாய்
என் செவிகேட்கும் வரங்களாய்!

மேலும்

priyavathani - priyavathani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2018 9:20 am

மழை என்ற ஒற்றை சொல்லிற்கு
இப்பூலோகமே மகிழ்ந்து போகும்!

வராமல் நீ இருந்தால் வீழ்ந்தேபோவேன்!

வந்து என்னை ஒருமுறையேனும் தீண்டிவிடேன்
உயிர் கொண்டுவிடுவேன் அந்தநொடியே!

தீண்டாமல் சென்றுவிட்டால் என்ன செய்வேன்!

தீண்டி சென்றுவிட்டால் எதுவும் செய்வேன்!

மண்ணுக்கு உயிர் தந்து உயிருக்குள்
உயிர் வளர்க்கும் அற்புதம் நீ!

தாயாகி இவ்வுலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம்
உயிர் தரும் அன்னையும் நீ!

நீரின்றி அமையாது உலகு என்ற வரிகளுக்கு ஏற்ப
நீயின்றி அமையாது எதுவும் இப்பூவுலகில்!

மேலும்

மிக்க நன்றி தோழமையே! 10-Jul-2018 9:10 am
மிக்க நன்றி தோழமையே! 10-Jul-2018 9:09 am
நல்ல படைப்பு. இன்னும் எழுதுங்கள். வாழ்த்துக்கள் 09-Jul-2018 3:07 pm
அருமை 09-Jul-2018 11:47 am
priyavathani - priyavathani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jul-2016 6:12 pm

வாழ்க்கையை வாழ வசதிகள் அனைத்தும் தேவையில்லை ஒருவனுக்கு நிம்மதியே தேவை!
அது இல்லாதவன் அனைத்து வசதிகள் இருந்தும் ஏழையே!

மேலும்

மிக்க நன்றி என் இனிய தோழிகளே,தோழர்களே!. 07-Jul-2016 11:18 pm
உண்மை பிரியவதனி 05-Jul-2016 5:05 pm
உண்மையே. நிம்மதியை தேடித்தான் வாழ்க்கை எளிதில் அது கிடைத்திடாது. வாழ்த்துக்கள் ...... 05-Jul-2016 3:04 pm
உண்மைதான்..கோடிகள் கொடுத்து வாங்கப்படுவதில்லை அவைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Jul-2016 5:34 am
priyavathani - பா இளங்கோவன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2014 11:53 am

சந்தோசத்தின் இருப்பிடம் எது?

மேலும்

அதுவும் சரி தான் 15-Jun-2014 8:50 pm
உங்களிடம்தான்! 15-Jun-2014 3:01 pm
நினைத்தது நடந்தால் சந்தோசந்தான்! 15-Jun-2014 2:03 pm
எனது பெயர். 15-Jun-2014 1:18 pm
priyavathani - priyavathani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-May-2014 12:51 pm

வைரமணிப் பூக்கள் தூவ
காரிருள் மகிழ் நடனம் புரிய
உலகெங்கும் உலா வருகிறாள் வெண்ணிற தேவதையொருத்தி இரவில்!

மேலும்

அருமை ...... 01-Jun-2014 6:11 pm
கற்பனையில் அழகு நயம் நன்று 27-May-2014 1:34 pm
நன்றி! 27-May-2014 1:21 pm
நன்றி! 27-May-2014 1:20 pm
மேலும்...
கருத்துகள்

மேலே