உன்னாலே

உன்னாலே!
என்னவள் நீதானே!உனை பார்த்த பின்தான்
நானும் நீயாய் மாறிப்போனேனே!

உன் ஓரவிழிப் பார்வை தீண்டும் பொழுதெல்லாம்
சூரியனைக் கண்ட பனித்துளிபோல கரைந்தே போனேனே!

உன் கற்றை கருங்கூந்தல் கலைத்து விளையாடத்தான்
காற்றாய் நானும் மாறிப்போனேனே!

உன் பூப்பாதம் நடந்திடத்தான் பாதையாய் மாறி
தினம் தினம் காத்து கிடக்கின்றேனே!

உன் நுனிவிரல் தீண்டும் ஓர் நொடிக்காதான்
மலராய் நானும் மலர்கின்றேனே!

எழுதியவர் : priyavathani (21-Aug-17, 5:54 pm)
Tanglish : unnale
பார்வை : 436

மேலே