எப்பொழுதடி கூறுவாய்
வெள்ளி சிதறலென விண்மீன்கள்
வான் எங்கும் சிதறி இருக்க!
வெண்ணிலவொளியோ பூமிமகளை
சுகமாய் வருடி இருக்க!
பனிசாரலை ஊடுருவும் கதிரவன் ஒளியென காதல்
என் மனமெங்கும் பரவி இருக்க!
வெண்தாமரை மலரென நீயோ
என் அருகில் வீற்றிருக்க!
உன் பூவிதலிருந்து உதிரும் வார்த்தைக்காக
என் இதயம் காத்திருக்க!
நானோ என்னை
உன் கண்ணில் தொலைத்திருக்க!
எப்பொழுதடி கூறுவாய் உன் கண்பேசும் காதலை வார்த்தைகளாய்
என் செவிகேட்கும் வரங்களாய்!