பெண் எனும் பெருங்கவி
மிச்சம் வைக்காமல்
நாம் தின்ற வெட்கம்
நம் காதல்தானடா!
வேண்டும் வேண்டும் என
கேட்டாயே இது போதுமா?
ஒரு ஜோடி பூக்கள் பார்க்காமல்
இன்னும் ஏக்கமா?
விலை கூடிப்போன பொழுதுகளை
யார் சமைத்தது அதில் தானே
நான் மலந்ததும் நீ ருசித்ததும்
தானாய் நடந்தது !
இன்றைய என்
பொய்யான கோபமும்
மெய்யான வெட்கமும்
பெரும் மழைக்கான இருக்கட்டுமே
என்று கவிதை பாடலாமே கண்ணாளனே!
மயங்கி சரிதல் எனும்
மகா கலையை மீண்டும்
ஒருமுறை முயற்சிக்கிறேன்
குழந்தையென உன்
மார்பில் முகம் புதைத்தே!
என் இல்லை என்ற உதட்டுசுழிப்பிலும்
இல்லவேயில்லை எனும்
தலையசைப்பிலும் அப்படியே
நான் நடக்கையில் என் பின்னால்
உன் நூறு கவிதைகள்
நடை பழகிடுமே தன்னாலே!
மழைமேகம் என்றாவது
மலர்ச்சோலையை திண்டாடவிடுமா?
மஞ்சத்தண்ணீர் ஊற்றி
மனம் குளிர்வித்திடுமே
அந்த வானவில்லின் வண்ணம் குழைத்தே!
இந்த காதல் பொல்லாதது
நம் கால்களை கொண்டாடுது
நீண்டதூரம் நடக்கையில்
போதுமென்று நில்லாது
இன்னும் கொஞ்சநேரம் என்று
கொஞ்சி கெஞ்சி கூத்தாடுதே!
இந்நேரமே! இந்நேரமே!!!