யாதுமாகி நின்றவள்

இயற்கை ஓவியன் எனக்காக படைத்த
பேசும் சித்திரமடி நீ எனக்கு !

என்னை பிரதிபலிக்கும் கண்ணாடியும் நீயே !

கரை காண இயலாத நட்பின் ஆழமும் நீயே !

நீ நான் என்பதெல்லாம் நாமாய் மாறியதெல்லாம் நம் நட்பாலே !

புது புனலாய் ஊற்றென நட்பெனும்
நீரை என்னுள் உருவாக்கிவிட்டவளும் நீயே !

தாயாய் தந்தையாய் உறவுகள் யாவுமாகி எனக்கென நின்றவளும் நீயே !

தோழி எனும் இரண்டெழுத்தாகிய ஒரு வார்த்தைக்குள்
எனக்கானவளாக சகலமுமாய் இருந்து கொண்டிருப்பவளே !
என் உயிர் தோழியே ! யாதுமாகி நின்றவளே !

எழுதியவர் : priyavathani (25-Oct-18, 2:22 pm)
சேர்த்தது : priyavathani
பார்வை : 732

மேலே