மழை

மழை என்ற ஒற்றை சொல்லிற்கு
இப்பூலோகமே மகிழ்ந்து போகும்!

வராமல் நீ இருந்தால் வீழ்ந்தேபோவேன்!

வந்து என்னை ஒருமுறையேனும் தீண்டிவிடேன்
உயிர் கொண்டுவிடுவேன் அந்தநொடியே!

தீண்டாமல் சென்றுவிட்டால் என்ன செய்வேன்!

தீண்டி சென்றுவிட்டால் எதுவும் செய்வேன்!

மண்ணுக்கு உயிர் தந்து உயிருக்குள்
உயிர் வளர்க்கும் அற்புதம் நீ!

தாயாகி இவ்வுலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம்
உயிர் தரும் அன்னையும் நீ!

நீரின்றி அமையாது உலகு என்ற வரிகளுக்கு ஏற்ப
நீயின்றி அமையாது எதுவும் இப்பூவுலகில்!

எழுதியவர் : priyavathani (9-Jul-18, 9:20 am)
Tanglish : mazhai
பார்வை : 414

மேலே