கண்கள் தொடுக்கும் காதல் பாகம் -4

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் -4

அவளைக் காண மூன்றாவது நாளும் கெளதம் பேருந்து நிலையத்திற்கு காலை 6:30 மணிக்கு வந்து காத்துக் கொண்டிருந்தான்..

மணி 7யைத் தாண்டியதும், ஆனந்த தாண்டவம் ஆடிடத் துவங்கியது, இன்றாவது அவள் வருவாளா ? இதயம் லப் டப்பென துடிப்பதற்கு பதிலாக டீசல் என்ஜின் போல் திக் திக் யென சத்தமாக துடித்தது..

பால் கேன்கள் ஒன்றோடு ஒன்றாக உரசிய சத்தம் சைரன் ஆக ஒலித்த படியாக அங்கு வந்து நின்ற இரு சக்கர வாகனம் M80 ஒன்றில்.. பச்சை நிற புடவை கட்டி,தலை நிறைய மல்லிகை பூ வைத்து, வளையல் ஓசையிட , கால் சலங்கை செவிக்கு விருந்தளிக்க வந்து இறங்கிய இளம் பெண் திரும்பினாள்...

கெளதம் அவளைக் கண்டவுடன் அடுப்பில் கொதித்த பாலாக மகிழ்ச்சியில் பொங்கினான்.

" ஒரு தேவதை
வந்து விட்டாள் என்னை
தேடியே வண்ண மாலைகள்
சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறு
ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல
சேர்ந்திருக்க தீபம் ஏற்றி
வைத்து தேரிழுக்க சேலை
சோலை கொண்டு சேர்ந்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க"என்ற பாடலை சத்தமாக படிக்க வேண்டுமென தோன்றியது அவனுக்கு..

காலையில் சாப்பிடாமல் வந்ததால் வயிறு சினுங்க ஆரம்பிக்க அருகில் உள்ள செல்வம் டீக்கடையில் டீயும் வடையும் ஒன்று வாங்கியவன் அதை தின்றானோ இல்லையோ.. கண்கள் அவளை தின்னு கொண்டு இருந்தது...

வாடிக்கையாக பயணிக்கும் பேருந்து வந்திட , பேருந்தில் ஏறிய அவளது தோழி பேக்கை ஒரு சீட்டில் போட்டு முன் பதிவு செய்து விட்டு, ஏடி " திரிஷா " உனக்கு சீட்டு போட்டிருக்கேன் இங்க வா யென அழைத்தது, கெளதம் காதையும் எட்டியது " திரிஷா" என ஒன்றுக்கு ஐந்து முறை மெளனமாக உச்சரித்து கொண்டான்

PMT கல்லூரியை பேருந்து நெருங்க கெளதம் மனதில் காட்டுத் தீயாக பதற்றம் பற்றிக் கொள்ள,இனி அவளை எப்போது காண்பேன், அதுவரை அவளை பார்க்காமல் எப்படி இருப்பதுயென சிந்தித்து கொண்டே பேருந்திலிருந்து இறங்கி திரும்பியவன், திரிஷாவை பார்த்து அதிர்ந்து நின்றான்...

... தொடரும்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (30-Mar-24, 8:57 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 25

மேலே