கண்கள் தொடுக்கும் காதல் பாகம் -3

கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் -3

மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு ஊரின் பேருந்து நிறுத்தம் வந்துவிட்டான் கெளதம்..அவளை எப்படியாவது பார்த்து பேச வேண்டும் என்று நினைத்தவாறு நின்றுகொண்டு இருந்தவனிடம்

அவ்வழியே விவசாய வேலைகளுக்கு செல்லும் அவனது உறவினர் கெளதம் இந்த நேரத்தில் எங்கே கிளம்பிட்ட என்றார்.. கெளதம் கல்லூரிக்கு என்றான்.. அதற்கு அவர் கல்லூரிக்கு படிக்க போகிறாயா இல்லை லுங்கி டான்ஸ் ஆடப் போகிறாயா என்றவுடன் கீழ் உடையை நோக்கினாள் pant போடாமல் லுங்கியோடு வந்தது தெரிந்தவுடன்..

அவசரமாக வீட்டுக்கு சென்று pant அணிந்து வர‌ சங்கரன்கோவில் செல்லும் முதல் பேருந்து வந்தது ஏறி சங்கரன்கோவில் பேருந்து நிலையம் வந்தவன்

அவளைக் காணத் துடித்துக் கொண்டு மின்சார தொடர் வண்டி போல் அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தான்..

மனதிற்குள் அவளை நாம் பார்த்தோம், அவள் என்னை பார்த்தாளோ இல்லையோ, கல்லூரிக்கு செல்பவளா இல்லை வேலைக்கு செல்பவளா, திருமணம் ஆகிருக்குமா ? ஐயோ அவளது கழுத்தில் தாலி இருந்ததா என்று பார்க்காமல் விட்டு விட்டனே என ஆயிரம் கேள்விகள் அவனது மனதை துளை போட்டுக் கொண்டிருந்தது..

அவன் பயணித்த பேருந்து வந்து விட்டது ஆனால் அவள் வரவில்லை.. கண்களால் வலை விரித்து தேடினான் பேருந்து நகர்ந்து செல்ல ஆரம்பித்தது இன்னும் அவள் வரவில்லை.. ஒருவேளை அவள் பேருந்து நிலையத்தின் வெளியே ஏறினாளும் ஏறலாம் என்று பரிதாபமாக பேருந்தின் பின்னே ஓடினான்..

ஏமாற்றுமே கிடைத்தது.. மீண்டும் பேருந்து நிலையத்திற்குள் வந்தான் தாமதமாக வந்தாலும் வருவாள் என்று..மணி 8:30 ஆகியும் அவள் வரவில்லை..

ஏமாற்றத்துடன் கல்லூரிக்கு சென்றவன், அவளது நினைவால் சோர்ந்து போகி இருப்பதைக் கண்ட பேராசிரியர் கெளதம் என்னடா ஆச்சு என்றார், அதற்கு அவனது நண்பர்கள் காதல் நோய் Sir என்றார்கள்..

படித்தால்தான்..பிடித்தவள் கிடைப்பாள் .. ஆதலால் முதலில் படிப்பில் கவனம் செலுத்து வாழ்க்கையில் பிடிப்பு கிடைக்கும் பின் காதலை காதல் செய்யுங்கள் என்று பேராசிரியர் கூற.. கெளதம் தலையை மட்டும் ஆட்டினான்..

அவனுக்கே தெரியாது அவள்.....

.... தொடரும்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (30-Mar-24, 8:55 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 30

மேலே