கண்கள் தொடுக்கும் காதல் பாகம் 2
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் 2
கெளதம் பயணித்த பேருந்து பஸ்நிலையம் கடந்து கோமதியம்மன் கோவில் சன்னதியின் முன் வந்திட, நின்று பயணித்த கெளதம் குனிந்து கோவில் கோபுரத்தை பார்த்து வணங்கிய மறு நிமிடம் பேருந்து நகர கோபுரம் மறைந்து, பேருந்தின் ஜன்னலோரத்தில் ...
பகலில் வந்த வெண்ணிலா மஞ்சள் தேய்த்து குளித்த பேரழகில்,எலுமிச்சை பழத்திற்கு மஞ்சள் தேய்த்தது போன்று அவளது மேனி தாங்கிய மஞ்சள் நிறத் தாவணி அழகுக்கு அழகு சேர்க்க, நெடுங் கூந்தல் காற்றில் கருப்பு அலையாய் பேருந்தில் மோதுகின்ற அழகையும் கண்ட கெளதம்..
தாய்க்கு இணையாக தாரம் ஆற்றாங்கரையில் தவம் இருக்கும் பிள்ளையார்க்கு கிடைத்ததோ இல்லையோ , அந்த வரம் தனக்கு கிடைத்ததாக மனதில் எண்ணிக் கொண்டு மெய் மறந்து ஊசியில் சிக்கிய நூலாக சிக்கியவன் ,அவளின் கண்களை இமைகள் சிமிட்டாது பார்த்து கொண்டே பயணிக்க..
நடத்துநர் டிக்கெட் டிக்கெட் என்று சொல்ல சட்டைப் பையிலிருந்து நாணயத்தை ஒன்றை நீட்டி PMT ஒன்று என்றான் ..காசை வாங்கி நாணயத்தை பார்த்து விட்டு நடத்துநர் கோபத்தில் இந்தா காசை நீயே வச்சுக்கோ என்று காசையும் பயண சீட்டையும் அவனது கையில் திணிக்க..
கையை விரித்து பார்த்தான் 10 ரூபாய் நாணயம் என்று நினைத்து ஒரு ரூபாய் நாணயத்தை நடத்துநரிடம் கொடுத்தது தெரிய வரை.. நடத்துநரிடம் மன்னிப்புக் கேட்ட படியே 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தான் ..
அந்த விநாடியே பார்வையை அவள் மீது தொடுக்க ஆரம்பித்தான் கெளதம்.பேருந்து PMT கல்லூரியை தாண்டியும் கெளதம் இறங்காததை நடத்துநர் பார்த்து விட ..டே சாவு கிராக்கி ஏன்ட காலையிலே உயிரை வாங்குத என்று குரல் கொடுத்து விசில் அடிக்க பேருந்து நின்றது.. அந்நேரத்தில்..
கெளதம் கீழை குனிந்தவாறு எதையோ தேடுவது போல் நடித்தான்.. நடத்துநர் டே என்னத்தை தேடுகிறாய் இறங்கிப் போடா என்றான்.. அதற்கு கெளதம் என் heartயை தொலைத்து விட்டேன் இல்லை... இல்லை little heart biscuits கீழை விழுந்து விட்டது அதை தேடுகிறேன் என்று உலறினான்..
இதைக்கேட்ட நடத்துநர் அவனின் கழுத்தை பிடித்து கீழை இறக்கி தொலைத்த இதயத்தை தேடி பாதுகாப்பாக வைத்திருக்கிறேன் நாளைக்கு வந்து வாங்கிக்கோ என்று நக்கலாக சொன்னான் ..
பேருந்தை விட்டு இறங்கியவன் கைக்கு எட்டிய சோறு வாய்க்கு எட்டாது தரையில் விழுந்த உணவை பார்த்து சிரிக்கும் குழந்தையாக..அவனை கடந்து சென்ற பேருந்தை பார்த்தவாறு நின்றிருந்தான்...
மறுநாள்...
.... தொடரும்
- சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்