எழுதினேன் நாலுவரி என்னிவள் பற்றி
எழுதினேன் நாலுவரி என்னிவள் பற்றி
எழுத்தினில் தென்றல் இனிமையாய் வீச
எழுதிட இன்னும் எழில்வானை நோக்க
எழுதெனமுன் நின்றாள் இவள்
----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
--எ எ எ இ எ எ எ இ ---1 3 ஆம் சீரில் மோனை
---சற்று மாற்றி
எழுதினேன் நாலுவரி என்னிவள் பற்றி
எழுத்திலோர் வானவில் இன்முத்தம் நல்க
எழுதிட இன்னும் எழில்வானை நோக்க
எழுதென்னை மட்டுமே என்றாள் எழிலாள்
எழுதுவேனோ வேறு இயம்பு
----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா --(-5 முதல் 12 அடி கொண்டது பஃறொடை வெண்பா)