என் குறை உணற உரைமதி
என் குறை உணற உரைமதி
+++++++++++++++++++++++++++
எட்டுத்தொகை நூல்களில் முதன்மை நூல்/
எளிமையாக சங்க காலத்தை அறிந்திடவே/
உதவிடும் அற்புத பாடல்கள் நற்றிணை/
உபயோகமாக தொகுத்திட்டார் பாண்டியன் மாறன்வழுதி/
பனை மரமாக உயர்ந்த கால்களை /
படைத்து பெளர்ணமி நிலவினைப் போன்று/
மென்மையான சிறகுகள் கொண்ட அழகான /
என்னருமை நாரையே சொல்வதைக் கேளாய்/
துணையைப் பாசத்துடன் நடத்துவதில் பறவைகளின்/
தனித்தன்மை வாய்ந்த நாரையே உன்/
துணையுடன் சுற்றாத்தாரையும் அழைத்துக் கொண்டு/
தாவிப் பறந்து விவசாயத்திற்கு ஊறுவிளைவிக்கும் /
பூச்சிகளையும் எலிகளையும் கிளையிருந்து உண்டிடுவாய்/
பறந்திடுவாய் மேல் நோக்கி எழுந்து /
கடுகளவு நெஞ்சத்தில் கடலளவு துன்பத்தில்/
இருப்பதை நாரையே நீ அறிவாய் /
கருநீரால் நிறைந்து தடவிநிற்கும இளமையான/
கண்டால் வேலிகளையுடய தழையுடுத்தி வாழ்கின்ற/
நாடாளும் மன்னரிடம் தமிழ்மொழியில் உரைப்பாய் /
நெய்தல் மண்ணில் காதல் கைகூட/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்