தாமரை முகத்தழகே
தாமரை முகத்தழகே
\\\\\\
தாமரை முகத்தழகே அச்சுவெல்ல பேச்சால் /
தாரமாக வருவதற்கு சம்மதம் சொல்/
வரப்பு வழி நீ நடந்த /
வாழையெல்லாம் சாயுதடி உன் அழகில் /
நான் மயங்கி தலை சாய்த்திட/
நெஞ்சம் தாடி என் வெற்றிலைக்கொடி/
இடையில் கூடையும் இடம் பிடிக்க/
இரட்டை சடை கார்மேகம் பொறாமை /
கொள்ளும் குற்றால அருவியான கூந்தலில்/
அடுக்கு மல்லிகை சரமாக ஆக்கிரமிக்க/
மச்சானுக்கு மட்டும் இடம் தர/
மறுக்கும் மச்சினியே வஞ்சகத்தை கைவிடு/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்