என்னை மயக்கிவிட்டாய்

என்னை மயக்கிவிட்டாய்...!
05 / 04 / 2024.

பூக்களில் நீ மல்லிகை என்றேன்.
பூ கைகளால் என்னை தழுவிச் சென்றாய்.
பூக்களில் நீ ரோஜா என்றேன்.
பூக்களின் இடையில் முள்ளாய் குத்திவிட்டாய்.
பூக்களில் நீ சாமந்தி என்றேன்.
சாமத்தில் பூத்து என்னை சாய்த்துவிட்டாய்.
பூக்களில் நீ சூரியகாந்தி என்றேன்.
சூர்யோதயம்வரை என்னை காய்த்துவிட்டாய்.
பூக்களில் நீ தாமரை என்றேன்.
சாமரம்வீசி என்நெஞ்சில் நிறைந்துவிட்டாய்.
பூக்களில் நீ முல்லை என்றேன்.
உன் பற்களை காட்டி சிரித்துவிட்டாய்.
பூக்களில் நீ தாழம்பூ என்றேன்.
மணம் வீசி நாகமாய் தீண்டிவிட்டாய்.
பூக்களை ஒவ்வொன்றாய் சொல்லிவந்தேன்
பூக்கள் வாடியதுதான் மிச்சம் - என்றும் வாடாத
பூக்களாய் பூத்து என்னை மயக்கிவிட்டாய்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (6-Apr-24, 5:55 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 125

மேலே