விருச்சிகராசியில் ஈஸ்வரன் 1

விருச்சிகராசியில் ஈஸ்வரன்
++++++++++++++++++++++++

பன்னிரென்டு மணியடிக்க மாப்பிள்ளை பெண்ணுக்கும்
பாலர் கல்யாணம் காப்பி பொறிகடலையோடு
நடந்தேறும் ஊரிலே நடத்தையை மாற்றி
நகை பணம் சீர்யென்று வரதட்சனையோடு

பத்திரிக்கை பந்தியோடு மணமேடை கண்டேன்
சொந்தம் விட்டுப் போகுமுனு
பந்தாட தயரான உறவுக் கூட்டம்
பாம்பாட்டிப் போல பணத்தைக் காட்டி

மூணாறு தங்கக் காசுக்கு ஆசைப்பட்ட
பரதேசி படக் கூட்டாமாக அடிபணிந்தே
தஞ்சாவூர் பொம்மையாக தலையாட்டி
தாரத்திற்கு தாலி கட்ட தலைவிதி..

தொடரும்..

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (6-Apr-24, 6:50 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 21

மேலே