புதிய பழமொழிகள்

1. நீ எத்தனை தடவையும் நேரத்தை கொல்லலாம். ஆனால், இறுதியில் நேரம் உன்னை ஒரேடியாக
கொன்றுவிடும்!

2. இந்தியாவில் பிறந்து வாழ்ந்திடில் மூன்று முறை திருமணம் காணலாம் (ஒரே ஒரு பெண்ணுடன்
திருமணம், அறுபது மற்றும் எண்பதாம் கல்யாணம்). அமெரிக்காவில் பிறந்து வாழ்ந்தால் மூன்று
முறை மூன்று வெவ்வேறு பெண்களை திருமணம் புரியலாம் (வயது விலக்கு எதுவுமின்றி)!

3. தமிழ் மொழி மட்டும் தெரிந்திருந்தால், கொஞ்சம் நல்ல நேரமிருந்தால் தமிழ்நாட்டில், ஏதோ ஒரு
மூலையில் தத்தளித்த வண்ணம், வாழ்க்கையை தள்ளலாம். ஹிந்தி மொழி தெரிந்தால் தமிழ்
நாட்டைத்தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும், ஏதோ ஒரு மூலையில் ஏதேனும் பணி செய்து
பிழைத்திடலாம்!

4. ஊபரில் காரோட்டியவன் பார்முலா-1 இல் காரோட்டலாம். பார்முலா-1 இல் காரோட்டியவன்
ஊபரில் ஓட்டமாட்டான் (பயணியாக மட்டுமே இருக்கமுடியும்)!

5. லேண்ட் லைன் போன் வைத்திருப்பவன் அறிவாளி
சாதா செல்போன் வைத்திருப்பவன் பேரறிவாளி
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவன் ஓட்டையுள்ள வாளி!

6. பள்ளிக்குச் சென்றால் ஆசிரியரை காணலாம்
கல்லூரிக்குச் சென்றால் பேராசிரியரை காணலாம்
ரயில் நிலையத்திற்குச் சென்றால் ரயிலை காணலாம்
பேருந்து நிலையத்திற்குச் சென்றால் பேருந்தை காணலாம்
ஆனால், கோவிலுக்குச் சென்றால் கடவுளை காண முடியாது!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (8-Apr-24, 3:25 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 141

மேலே