காதல் அநுராகம்

விரியும் மலர் விழியாள் அவள் கண் அசைத்தாள்
நான் என்னையே இழந்தேன் அவள் வசமானேன்
அவள் இன்னும் பேசவில்லை இதழ்கள் விரியா
அவள் அதரங்கள் மூடிய தேன்சிந்தும் தாமரை மொட்டோ
அதனோரம் சிந்தும் புன்னகை காதல் ராகம் பாடியதே
ஓசை வாரா மௌனராகம் அதுவே
என்னுள்ளம் கவர்ந்த அநுராகம் அது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Apr-24, 3:13 pm)
பார்வை : 76

சிறந்த கவிதைகள்

மேலே