மட்டி பட்டி

ஏனுங்க உங்க பேரன் மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள்

பிறந்ததாச் சொன்னாங்க. குழந்தைகளும் தாயும் நலமா

இருக்கிறாங்களா?


@@@@@@

உம். நலமா ஆஸ்திரேலியாவில இருக்கிறாங்க.

@@@@

இரட்டைக் குழந்தைகள், ஆண் குழந்தைகளா பெண்

குழந்தைகளா?

@@@@@@@@

இரட்டையர்களில் மூத்த குழந்தை ஆண் குழந்தை.இரண்டாவது

குழந்தை பெண் குழந்தை.

@#@@@@@

அப்பிடீங்களா? குழந்தைகளுக்குப் பேரு வச்சுட்டாங்களா?

@@@@@@

வச்சுட்டாங்க.

@@@@@@

தமிழ்ப் பேருங்களா இந்திப் பேருங்களா?

@@@@@

இந்தக் காலத்தில் தமிழர்கள் யாரும் அவுங்க பிள்ளைகளுக்குத்

தமிழ்ப் பேரை வைக்கிறதில்லை. இது உங்களுக்குத் தெரியாதா?

@@@@@@

ஆமாங்க. அதை நான் மறந்துட்டேன். சரி, குழந்தைகள்

பேருங்களைச் சொல்லுங்க ஐயா.

@@@@@@

ஆண் குழந்தை பேரு 'மட்டி'. பெண் குழந்தை பேரு 'பட்டி'.

@@@@@@@@@@@@

என்னங்க இரண்டு குழந்தைகள் பேரும் தமிழ்ப் பேருங்க மாதிரி

இருக்குதே!

@@@@@

தமிழ் 'மட்டி', 'பட்டி' இல்லங்க. வேற மொழிப் பேருங்கனு

சொன்னாங்க. பேருங்களுக்கு பொருள் என்னடானு எம் பேரனைக்

கேட்டேன். "அதைத் தெரிந்து என்ன செய்யப் போறீங்க"னு

கேட்டான். நானும் மேற்கொண்டு அதைப்பத்தி அவனைக் கேட்கல.

@@@@@@

ஆமாங்க. உங்க பேரன் அவனோட இரட்டைக் குழந்தைகளுக்கு

தமிழ்ப் பேரை வைக்கலையேனு சந்தோசப்படுங்க.

@@@@

ஆமாய்யா. சந்தோசமாத்தான் இருக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Matti = Gift of God. Masculine name. Finnish origin.

Patti = Noble woman. Indian, English origin.

எழுதியவர் : மலர் (12-Apr-24, 6:11 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 25

மேலே