கண்கள் தொடுக்கும் காதல் பாகம் - 16
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 16
சிங்காரத்தை பார்த்து carக்கு திரும்பிய கமல்,சிங்காரத்துக்கு வாங்கி வந்த பழங்களை எடுத்துக் கொடுக்க மறந்திருக்க.. திரிஷா பழங்களை மறந்து வைக்கவில்லை, மீண்டும் அவனை பார்க்க வேண்டும் என்ற சந்தர்ப்பத்தை உருவாக்க தெரிந்தே செய்த செயல்..
பழங்களை எடுத்து சென்ற திரிஷாவின் கண்களில் புல்லின் பனி போல கண்ணீர் தெரிந்தது.. கண்ணீர் முகத்தை அடைவதற்குள் துடைத்து கொண்டவள் கெளதமின் கைகளில் பழங்களை கொடுத்தவள்,எப்ப கல்லூரி வருவ என்றாள்,2 days யில் வந்து விடுவேன் என்றான்.
முகில் சூழ்ந்த வானில் தெரியாமல் இருக்கும் கதிரவனை காணாமல் தாமரை எப்படி மலராதோ ,அதுபோல உன்னை காணாமல் உண்டிட உறங்கிட மறப்பேன்.. என்றாள் திரிஷா..
கதிரவனை காணாமல் தவிக்கும் தாமரை மொட்டை ஒட்டாத தண்ணீர் எப்படி வாடாமல் பாதுகாக்கிருதோ , அதேபோல் உன்னருகே நான் இல்லாவிட்டாலும்,உன் நினைவில் நான் உன்னிடமே இருப்பேன் .வாடாதே திரிஷா என்றான்..
சிங்காரத்தை மருத்துவமனையிலிருந்து discharge செய்யப்பட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றான் கெளதம்..
2 நாட்களில் collegeக்கு வருவேன் என்றவனை நான்கு நாட்கள் ஆகியும் காணவில்லையே என்று கவலையில் ஆழ்ந்தாள் திரிஷா..
சங்கீதாவின் திருமண செலவு 2 லட்சம் கடன் அப்படியே இருக்கு, சீமந்தம் செய்ய வாங்கிய கடனையும் அப்பாவுக்கு செலவு செய்து விட்டோம்,
சங்கீதாவின் வளைகாப்பு சீமந்த விழாவை 7 ஆம் மாதத்தில் வேண்டாம் 9ஆம் மாதத்தில் வைத்து கொள்வோமா என்று கெளதமின் அம்மா கெளதமிடம் சொல்ல.. சரிம்மா என்றான்..
அம்மா நான் வேலைக்கு சென்றால் கொஞ்சம் கடனை அடைப்பதற்கு உதவிய இருக்கும்.. செல்லட்டுமா என்றான் கெளதம்
படிப்பு? என்று வடிவுக்கரசி இழுக்க
வேலை செய்தபடியே வீட்டிலிருந்து படித்து பட்டம் வாங்கலாம் என்றான்..
தினத்தந்தி நாளிதழில் விளம்பர பகுதிகளை பார்த்தபோது, ஆட்கள் வேலைக்கு தேவை , இருக்கும் இடம் உணவு இலவசம், முகவரி,J Super market ,ஸ்ட்ரான்ஸ் சாலை, பட்டாளம்,சென்னை.கைப்பேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது.அந்த நம்பர்க்கு போன் செய்தான், விவரத்தை கேட்டறிந்த அதன் உரிமையாளர்,நாளையே வேலைக்கு வாங்கயென அழைத்தார்கள்..
திரிஷாவின் வீட்டுக்கு சென்றான் கெளதம், வீட்டின் வரவேற்பு மணிக்கான பொத்தானை அழுத்த கதவை திறந்து திரிஷா வந்தவள் தையில் பொழியும் நெய் மழையாக மகிழ்ச்சியில் உறைந்தவள்..வா கெளதம்..அப்பா எப்படி இருக்காங்க என்று கேட்டாள் , நல்ல இருக்காங்க திரிஷா.. என்றான்..
கெளதமை உட்கார வைத்து அவனை நெருக்கமாக ஒட்டியபடி இருக்கையில் அமர்ந்தாள், வீட்டில் அப்பா அம்மா இல்லையா என்றான் கெளதம்.இல்லை வெளியே சென்றிருப்பதாக சொன்னவள் அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்..
திரிஷா.. என்றான்,சொல்லு என்றாள்.. நான் வேலைக்காக சென்னை செல்ல போகிறேன் என்றான்.. தோளில் சாய்ந்து இருந்தவள் திடுக்கிட்டு எழுந்தாள்..
கெளதம் சென்னை சென்றானா ? இல்லையா ?
...தொடரும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்