புத்தாண்டு பிறக்கட்டும் புதுவெள்ளம் பெருகட்டும்

புத்தாண்டு பிறக்கட்டும்
புதுவெள்ளம் பெருகட்டும்/


பசிப்பிணியால் இறப்போர்
பாரினில் இல்லாமையும்/
புசிக்க உணவிடும்
பண்பும் பெருகட்டும்/

பூத்திடா மொட்டை
பதபதக்க நசுக்கிடும்/
பாதகர் அற்றதோர்
பாரதமாக உருவாகட்டும்/

பட்டம் பெற்றவரும்
பட்டம் விட்டவரும்/
பஞ்சம் தீர்த்திடனும்
புஞ்சையை உழுதே/

பற்றும் சா(தீ)
பரவிடும் நோயும்/
பாறையாக சிதைவுற்று
புதுப்பாதை வகுக்கட்டும்/

பதியென்ற ஆதிக்க
பெண்ணடிமை அழியட்டும்/
புத்தாண்டு பிறக்கட்டும்
புதுவெள்ளம் பெருகட்டும்/

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (14-Apr-24, 10:52 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 107

மேலே