நிலையான அழகு எது

அப்பப்பா என்ன அழகு இவள் அழகு
என்று எனக்குள் கூறிக் கொண்டே
அவள் அழகின் லாவண்யத்தை ரசித்து கொண்டே
இருந்தேன்.....அப்போது அவள் பக்கம் வந்து
நின்றாள்......ஒரு பெண்மணி
அவர்......அவ்வழகியின் தாயாம்..
அன்று அவள் அன்றைய இளைஞர்க்கு
கனவுலகு கன்னி....கணக்கு கிடைக்கா அழகி
இன்றோ......பாவம் மூப்பில் வாடும் உடலில்...
எங்கு போனது....அந்த 'அழகு'

கீதையில் கண்ணன் கூறியது
நினைவுக்கு வைத்தது...

நாம் நம் உடல் அல்ல...நாம்
அதில் உறையும் 'அழியா ஆத்மா;

இந்த உடல் .....அழியும்
புதிய ஆடை....நாளை
'கந்தலாய்; மாறுவது போல்

உடல் அழகு நிலை இல்லாதது
பருவங்களால் தாக்கப் படுவது
முடிவில் சுவடு தெரியாது அழிவது

உடல் அழகு ...?

வெறும் மாயை....கானல் நீர் போன்றது

உண்மையானது எது ?

அதுவே......'கடவுள்'
யாக்கை நிலை யற்றது...
அழகான உடலில் நாம் காண்பது வெறும் மோகம்
காதல்......'அவன் மீது' நாம் கொள்ளும் பக்தி... ஆசை..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (14-Apr-24, 1:08 pm)
பார்வை : 47

மேலே