உழவே தலை உழவில் இல்லை பிழை
உழவே தலை உழவில் இல்லை பிழை
×××××××××××××××××××××××××××××××××
அரசனுக்கும் உயர்ந்தவன் உழுதிடும் உழவன் /
அகிலத்திக்கும் அன்னம் வழங்கிடுபவனும் அவனே /
பிறரிடம் கையேந்தி நின்றிட மாட்டான் /
பசியால் யாரையும் தூங்க விடமாட்டேன்/
மண்ணை வளமாக்கிடுவான் நாட்டின் பொருளாதாரத்தை /
முன்னேற்றி வல்லரசு நாடாக உயர்த்திடுவான் /
தான் மட்டும் கோமணத்தில் மிளிருவான் /
தாயினைப் போன்று தியாகத்தைச் செய்திடுவான்/
வரப்பை உயர்த்தி நீர்ப் பாய்ச்சிவிடுவான்/
வளரும் பயிரைக் கண்டு மகிழ்ந்திடுவான்/
விளைச்சல் கண்டு கனவில் உயர்த்திடுவான் /
விளைந்தப் பொருள் விற்பனைச் செய்து/
கணக்கிட்டுப் பார்த்தால் கடனில் மூழ்கிடுவான் /
கழனியேக் கதியென்று மண்ணில் உருண்டாலும்/
விவசாயிகளின் வாழ்வு மீளாது இருந்திடுவான் /
வறுமைக் கோட்டினைத் தாண்டாமல் ஏழையாக/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்