இன்னொரு தாயாய் நீதான் இருக்கின்றாய்

இன்னொரு தாயாய் நீதான் இருக்கின்றாய்

இன்னொரு தாயாய் நீதான் இருக்கின்றாய் /
இயற்கைக் காற்றைச் சுவாசிக்கத் தருகிறாய் /
தாயாக நீயும் நிழல் தந்து/
தாய்மடியாக வேர்களில் அடைக்கலம் தருகிறாய்/

தென்றல் தாலட்ட விழுதுகளை ஊஞ்சலாக்கி /
தூங்கி மகிழத் துணைப் புரிவாய்/
தூய கனிதந்து பசி தீர்ப்பாள்/
தாயாக வந்த மரத்தாயே வணங்குகிறேன்/

சமதான வெயிலுக்கு நிழல் தந்திடுவாள்/
சாதிகள் பார்க்காமல் தஞ்சம் அழித்திடுவாள்/
வானத்துப் பறவைக்கும் தலையைத் தந்து/
வாழ்ந்திடக் கூடுகள் கட்ட இடமளிப்பாள் /

பெற்றத் தாயை எமன் கொன்றான் /
மரத்தாயை மனிதன் வெட்டி அழித்தான் /
தாயிழந்து பாலுக்கு அழுதிடும் குழந்தையாக /
தண்ணீர்க்கு அழுகிறோம் காட்டை அழித்து/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (20-Apr-24, 1:33 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 69

மேலே